Monday, April 22, 2024

டெல்லி பறந்த மணிரத்தினம் !கமலும் ரெடி சிம்புவும் ரெடி சூடு பிடித்த தக் லைஃப் படப்பிடிப்பு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தார் கமல்ஹாசன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் என படங்களில் பிஸியாக சுழன்று வருகிறார் கமல்ஹாசன்.நாயகன் படத்துக்கு பின்னர் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னம் உடன் மீண்டும் இணைந்துள்ளார் கமல்

கடந்த 2022ம் ஆண்டு கமலின் பிறந்தநாள் அன்று KH 234 படத்தின் துவக்கம் குறித்த அப்டேட் வெளியானது.அதன்பிறகு கடந்தாண்டு கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 டைட்டில் தக் லைஃப் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது‌.இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் குறித்த அறிவிப்புகள் வெளியாகின.

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, நாசர், கெளதம் கார்த்திக், அபிராமி ஆகியோரும் இப்படத்தில் இணைந்தனர். இவர்களுள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி கால் ஷீட் பிரச்சினை காரணமாக விலகியதாக கூறப்பட்டது.மீண்டும் அவர்கள் மணிரத்தினத்தோடு இணைந்துள்ளனர்.‌இவர்கள் மட்டுமின்றி சிம்புவும் இணைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

நடிகர் கமல் தேர்தல் பிரச்சார பணிகளில் பிஸியாக இருந்ததால், மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வந்தார் மணிரத்னம். ராஜஸ்தானின் ஜெய்ஸ்சல்மார் பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஷூட்டிங்கில், சிம்புவும் த்ரிஷாவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசன் ஃப்ரீயாக உள்ளதால் தக் லைஃப் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள டெல்லி சென்றுள்ளார்.இதற்கிடையில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மேர் பகுதியில் நடந்துள்ளது.இதைத்தொடர்ந்து டெல்லியில் படப்பிடிப்பு நடைப்பெற உள்ளது.சிம்பு 2 வேடங்களிதும் கமல் 3 வேடங்களிலும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மணிரத்தினம் கமல் மற்றும் சிம்பு ஆகியோரின் படப்பிடிப்பு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News