Monday, April 22, 2024

மே ஒன்றாம் தேதியும் மூன்று அப்டேட்களும்! தவமாய் தவமிருக்கும் அஜித் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உழைப்பாளர்கள் தினத்தன்று பிறந்த நடிகர் அஜித் மிகச்சிறந்த உழைப்பாளர்.மே ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினமாக இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் அன்று தல தினம் தான். நள்ளிரவு 12 மணி முதலே சமூக ஊடகங்களின் ட்ரெண்ட்-ஐ தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து பிறந்தாள் வாழ்த்துக்களின் மூலம் அவர்களது அன்பை தெறிக்கவிடுவார்கள். அஜித் ரசிகர்கள்.

கடந்த வருடம் அஜித் பிறந்தாள் அன்று மகிழ் திருமேனி இயக்ககத்தில் அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியாகி விருந்தாக அமைந்தது.அத்தோட அப்படத்தின் எந்தவொரு அறிவிப்பும் தற்போது வரை வராத நிலையில் வருகின்ற மே 1ம் தேதி அவரின் பிறந்தாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அப்டேட் மட்டுமின்றி மேலும் இரண்டு சம்பவங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. இப்படத்தின் 75% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் மீதி காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படம் விரைவில் உருவாக உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இப்படம் அடுத்த வருடம் 2024 இல் பொங்கல் பண்டிகையை குதூகலப்படுத்த திரைக்கு வரவுள்ளது.

மேலும் இப்போது விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸாகி தியேட்டரில் வசூல் வேட்டை நடத்தி கொண்டு இருக்கிறது அதற்கு போட்டியாக வெங்கட் பிரபு மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டான மங்காத்தா படம் மே 1ம் தேதி ரீ ரிலீசாக உள்ளது.இப்படி அப்டேட்கள் கொண்டாட்டங்களாக மே 1ம் தேதி நிறைய உள்ளதை எண்ணி காத்துகிடக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

- Advertisement -

Read more

Local News