பிக்பாஸ் போட்டியாளரும் மாடலுமான ரைசா வில்சன், ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்து தானும் ஒரு சூப்பரான நடிகை தான் என நிரூபித்தார். ஆனால் அதற்கு ஒரு கட்டத்தில் அவரது பட வாய்ப்புகள் குறைந்தது. ஒரிரு படங்களில் கமிட்டாகி இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.


கடந்த ஆண்டில் இவர் செய்துகொண்ட பேஷியல் சிகிச்சையின் போது முகம் வீங்கியது. தவறான சிகிச்சை காரணமாக இது ஏற்பட்டதாகவும், மருத்துவர் மீது குற்றச்சாட்டு வைத்து நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். இதற்கு பின்னர் ஒருவழியாக இப்பிரச்சனை தீர்ந்தது.


தற்போது, ரைசா வில்சன் கைவசம் பெரிதாக படங்கள் எதுவும் இல்லை. புதிய வாய்ப்புகளுக்காக மீண்டும் முயற்சி கொண்டு உள்ளார். இச்சமயத்தில் சிவப்பு நிற மார்டன் சேலையில் கவர்ச்சியாக வெளியிட்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.