Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனோடு மோதிய சஞ்சய் தத்! #SK23

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்தார், இந்த படம் அவருக்கு தமிழில் ஒரு பெரிய அறிமுகமாக இருந்தது. தற்போது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 23வது படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது சென்னையில் சிவகார்த்திகேயன் மற்றும் சஞ்சய் தத் மோதும் அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், கன்னட நடிகை ருக்குமணி வசந்த் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி உள்ளனர். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஓராண்டாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. தற்போது இப்படத்தை வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News