சினிமாவிலிருந்து விலகியிருந்தாலும், ரசிகர்களால் ‘வைகைப்புயல்’ என்று அழைக்கப்படும் வடிவேலு, முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் உதவியுடன் சினிமாவில் அறிமுகமான வடிவேலு, தனது சிரிப்பூட்டும் நடிப்பாற்றல் மற்றும் தனித்துவமான பேச்சுக்கு கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் சில படங்களில் இணைந்து நடித்தார். அவர்கள் சினிமாவிலிருந்து விலகியபோது, வடிவேலு அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால், 2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி வடிவேலு திரையுலகில் ஓரம் தள்ளப்பட்டார். ஜெயலலிதாவை பார்த்து பயந்து, யாரும் வடிவேலுவிற்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இதனால், சுமார் 10 ஆண்டுகள் வரை படங்களில் நடிக்கும் வாய்ப்பே இல்லாமல் இருந்தார்.
பின்னர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் மீண்டும் நுழைந்த வடிவேலு, அந்தப் படத்தின் மோசமான விமர்சனங்களால் துவண்டார். ஆனால், அடுத்து வந்த மாமன்னன் படம் பெரிய வெற்றியாக அமைந்தது.
இருப்பினும், எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால், புதிய டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவு செய்தார். ஆனால், அதிக சம்பளம் கேட்டதால் சன் டிவி யோசித்து வருவதாகவும், வடிவேலு சம்பள விஷயத்தில் ஸ்ட்ரிக்ட்டாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.