தி ப்ரூஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் கோயிலுக்குப் போகாதீங்க தியேட்டருக்கு போங்க என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கோயிலுக்கு போனாலாவது மனநிம்மதி ஆச்சு கிடைக்கும் ஆனால் தியேட்டருக்கு போன இப்ப வர படங்கள பாத்தா பிபி தான் ஏறுது என மிஷ்கின் பேச்சை கலாய்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், ராதிகா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி உள்ள தி ப்ரூஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சினிமா குறித்து பேசிய மிஷ்கின் அதோடு கோயிலுக்கு போகாதீங்க என பேசியிருப்பது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மிஷ்கின் வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும் என மிஷ்கின் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என பேசியிருக்கிறார்.
நீங்கள் என்னைக்காவது சிவனை பார்த்து இருக்கீங்களா? என்னை பொறுத்தவரையில் சிவாஜி கணேசன் தான் சிவன். அவர் நடிப்பில் தான் சிவனை பார்த்திருக்கிறேன். கோயில் உங்களுக்கு எதுவும் தர போறது இல்லை. தியேட்டரில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு படங்களை அழுது கொண்டு கொண்டாட்டத்தோடு படத்தை பார்க்கலாம் என பேசியுள்ளார்.