பிரபல மாடலான மீனாட்சி சௌத்ரி ‘Out of Love’ என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான பின்பு, பல பட வாய்ப்புகள் கிடைத்தன. அதில் தெலுங்கில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘இச்சாட வாகனமுலு நிலுப ராடு’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர், ரவி தேஜாவுடன் ‘கில்லாடி’, அத்வி சேஷுடன ‘HIT-The Second Case’ போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து இவரது படங்கள் சூப்பர் ஹிட் அடைய, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் ‘குண்டூர் காரம்’ படத்தில் நடித்தார்.
டோலிவுட்டில் பிஸியாக இருந்தபோதும், தமிழில் இருந்து வந்த அழைப்பு, ‘கொலை’ படத்துக்காக வந்தது. பாலாஜி குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனியுடன் இணைந்து இப்படத்தில் நடித்தார். மேலும், தற்போது விஜய்யுடன் இணைந்து ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் இணைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
‘கோட்’ படத்தில் மீனாட்சி சௌத்ரி, டீ ஏஜிங் செய்யப்பட்ட விஜய்யுடன் நடித்தார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான போது, விஜய்யுடன் நடிப்பது தன்னுடைய கனவாக இருந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘கோட்’ படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
அவருடைய பதிவில், கோட்’ படத்திலிருந்து நான் உங்கள் ஸ்ரீநிதி. இன்னும் நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து வருகிறேன். படப்பிடிப்பை சிறந்த அனுபவமாக மாற்றியதற்காக படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஸ்ரீநிதி கதாபாத்திரத்திற்கு கிடைத்த அன்பிற்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.