Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

குக் வித் கோமாளிக்கு போட்டியாக இறங்கும் டாப் குக்கு டூப் குக்கு! இது அதுல்ல வடிவேலு பாணியில் ரசிகர்கள் ட்ரோல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது 5வது சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த சீசனில் இருந்து ‘மீடியா மேஷன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்புப் பொறுப்பு விலக்கப்பட்டுள்ளது. ‘மீடியா மேஷன்ஸ்’வின் ரவூஃபா விஜய் டிவியுடனான தங்களது பிசினஸ் உறவை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். இந்தப் பிரிவுக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

எப்படியோ, ‘மீடியா மேஷன்ஸ்’ விஜய் டிவியிலிருந்து வெளியேறுவதாகவும், அடுத்து எங்கே செல்லவுள்ளனர், எந்த நிகழ்ச்சியைத் தரவிருப்பது, யார் யார் அவர்களுடன் இணையவுள்ளனர் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இப்போது, இந்தக் கேள்விகளுக்கான பதில் கிடைத்துள்ளது. வெங்கடேஷ் பட் கலந்துகொள்ளவுள்ள ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியின் புரோமோ சன் டிவியில் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி மே மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட்டே தயாரிப்பதாகக் கூறப்பட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, நிகழ்ச்சி குறித்து மேலும் அறிய, அதன் ஏற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டபோது

சன் டிவியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சி வெளியாக இருக்கிறது, அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் பட் என்ற வதந்தி பரவி வந்தது.உண்மையில், ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியை மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. மீடியா மேஷன்ஸின் ரவூஃப் முதல் முறையாக தான் பிரபலமான சன் டிவியுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறினார்.

- Advertisement -

Read more

Local News