விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. அதன் பிறகு, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ‘ராட்சசன்’ படங்களில் நடித்தார்.
‘அசுரன்’ படத்தில் தனுஷின் முன்னாள் காதலியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் பிளாஷ்பேக் பகுதியில் நடித்தார். இதன் பிறகு, துப்பாக்கி முனை, தம்பி, காரி, பாபா பிளாக்ஷிப், கண்ணகி மற்றும் ஹாட் ஸ்பாட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவற்றுக்கு பின்னர், சின்னத்திரையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் மணியை காதலிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இருவரும் இதை மறுக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், பார்த்திபன் மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் இதன் மூலம் அவரது காதலை உறுதிப்படுத்தியுள்ளார் அம்மு அபிராமி என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மணியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, “பிறந்ததற்கு நன்றி, வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.