Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கல்யாணம் பண்ணா நம்ப லைஃப்பா நல்லா இருக்கும்? வரலட்சுமி போட்ட வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகருமான வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெலுங்கில் வெளியிட்டுள்ள திருமணம் குறித்த வீடியோ ரசிகர்களை லேசாக அதிர்ச்சியில் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் நீண்ட காலமாக காதலித்தாக கூறப்பட்ட நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இருவரும் வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்து டேட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு பதிவிட்டனர்.

இவர்களுக்கு நிச்சயம் முடிந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது திருமணமானால் யாருக்கு நல்லது என வீடியோ ஒன்றை வெளியிட்டு ஃபன் செய்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

திருமணம் நடந்தால் யாருக்கு நல்லது? என்கிற கேள்வியுடன் தொடங்கும் அந்த வீடியோவில் திருமணம் நடந்தால் புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராஃபர், சமையல்காரர், மண்டபக்காரர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சேலை கட்டி விடுபவர்கள் போன்றவர்களுக்குத்தான் நன்மை அதனால், திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என தெலுங்கில் வீடியோ வெளியிட்டு நகைச்சுவை செய்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News