Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கருடன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து சூரி வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி ஆகியோர் நடிப்பில் கடந்த மே 31ஆம் தேதி வெளியான படம் கருடன். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்த சூரி, அதன்பிறகு கருடன் படத்தில் நடித்துள்ளார். படம் வெளியான நாள் முதல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் 27 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.இந்த படம் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

படத்தின் வெற்றியை முன்னிட்டு இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார் சூரி. இதன் பின்னர் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் சூரி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News