Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கருடன் அடித்த அரைசதம்… இவ்வளவு கோடி வசூலா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2024 மே 31-ல் வெளியான கருடன் திரைப்படம் 10 நாட்களில் 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.’லால் சலாம்’ படத்தை முந்தி சாதனை படைத்துள்ளது.இன்றுவரை கருடன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில் குமார் இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் படம். இப்படத்தை தயாரிப்பாளர் கே குமார் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.விடுதலை படத்தை தொடர்ந்து சூரியின் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பைப் கொடுத்துள்ளது கருடன்.

கருடன்’ திரைப்படம் ஒரு குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அதிரடி – திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ஆர்தர் எ வில்சன், படத்தொகுப்பு பிரதீப் ஈ ராகவ் செய்துள்ளார். இப்படத்தில் பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.கருடன் திரைப்படம் முதல் நாளிலிருந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிராமத்து திரைக்கதையில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சூரி, இப்படத்தில் நாயகனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். கருடன் படத்தின் வசூல் தற்போது 50 கோடியை கடந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News