நடிகர் விஜய் நடிக்கும் வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவர் மகன் கேரக்டருக்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய்யின் புதிய படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு மாஸ்கோவில் சமீபத்தில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் முன்னரே படக்குழு சென்னை திரும்பியது.
கடந்த சில நாட்களாக, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இந்தப் படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.அடுத்த சில நாட்களில் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இந்தப் படப்பிடிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அது படத்தின் சண்டைக்காட்சியா அல்லது வேறு எந்தவொரு காட்சியா என்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இன்னும் இரண்டு வாரங்களில் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும், அதன்பிறகு படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தில் இருப்பதால், அடுத்ததாக விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.