உலகளவில் 36 கோடி ரசிகர்களை இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக கொண்டுள்ள பிரபல அமெரிக்க டிவி நடிகையும் சூப்பர் மாடலுமான கிம் கர்தாஷியன் மிகப்பெரிய கோடீஸ்வரியாகவும் தொழிலதிபராகவும் திகழ்கிறார். ஆனாலும், அம்பானியின் அழைப்பை மதித்து மும்பைக்கு வந்த அவர், ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் தம்பதியினரின் திருமணத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய வாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


உலகளவில் பல முன்னணி நடிகைகளே கிம் கர்தாஷியனின் ரசிகைகளாக உள்ள நிலையில், ஐஸ்வர்யா ராயை பார்த்த கிம் கர்தாஷியன், குயின் என அவரை அழைத்ததுடன், அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட கிம் கர்தாஷியன், இந்திய பாரம்பரியத்தை ரொம்பவே நேசிக்கிறார் என்பதற்கு அடையாளமாக தற்போது அவர் வெளியிட்டுள்ள செல்ஃபி மாறியுள்ளது.

கிம் கர்தாஷியன் மும்பை ஜியோ சென்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்து கொண்டார். இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திருமண விழாவில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்ட கிம் கர்தாஷியன், சர்வதேச ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியாவுக்கு வந்த கிம் கர்தாஷியன் சில கோயில்களுக்கும் சென்றிருக்கிறார். நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டு செல்ஃபி எடுத்து “Bless Me” என வெளியிட்டுள்ளார், அது தற்போது வைரலாகி வருகிறது.

