சென்னையில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில், நடிகர் விஷால் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், இருவரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி (இன்று) திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்து அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார்.

அதேபோல் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், “ஆகஸ்ட் 29 ஆம் தேதி நல்ல செய்தியை தெரிவிப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த வகையில், சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் விஷால் – சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது. குடும்பத்தினர் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வில், இரு வீட்டார், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஷால் – சாய் தன்ஷிகா இருவரும் தங்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.