Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

எல்லாம் பக்கா மாஸ்…பகத் பாசில்-ஐ புகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான ஆவேஷம் திரைப்படம் உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.பகத் பாசில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியானதும் கேரளா மற்றும் தமிழ்நாடு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஹிப்ஸ்டர், ரோஷன் ஷனவாஸ், மித்துன் ஜெய் சங்கர், சஜின் கோபு, மன்சுர் அலிகான் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். படத்தின் ‘இலுமினாட்டி’ பாடல் இணையத்தில் வைரலானது. பகத் பாசில் படத்தில் செய்த ரீல் இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தில் பகத் பாசிலின் ‘எடா மோனே’ வசனம் மிகவும் பிரபலமானது.

சமீபத்தில் பிரபலமான நடிகைகள் சமந்தா, சைத்திரா உள்ளிட்ட பலர் இப்படத்தைப் பார்த்து பாராட்டினர். அதனைத் தொடர்ந்து, நடிகை நயன்தாரா அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பாராட்டியுள்ளார். அதில், இது இந்த ஆண்டிற்கான சிறந்த படமாகும், ஜித்து மாதவனின் இயக்கம் கமர்ஷியல் ரீதியான படங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்றும், ஃபாஃபா, வாட் எ கில்லர் பெர்ஃபாமன்ஸ் மற்றும் கேங்க்ஸ்டர் சாகாவின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.மேலும், படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் போன்றோரையும் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News