Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

என்னுடைய திருமணம் நிச்சயம் ஒருநாள் நடக்கும்… நடிகர் பிரசாந்த் ப்ளீச்! #ANDHAGAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

90களில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் போன்ற பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில், அவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையால் அவரது சினிமா பயணமும் சற்றே நின்றுவிட்டது. தற்போது ஹிந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடித்துள்ளார் பிரசாந்த். இந்த படத்தை அவரது தந்தையான நடிகர் தியாகராஜன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரசாந்த் உடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர், ஆனால் தற்போது ஒரு வாரம் முன்பாகவே ஆகஸ்ட் 9ம் தேதியே வெளியிட முடிவு செய்துள்ளனர். தற்போது பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் பிரசாந்த்.

ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசாந்திடம், அவரது இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி கேட்ட போது, “என்னுடைய திருமணம் நிச்சயம் ஒரு நாள் நடக்கும். அதற்கு நான் ஒப்புக்கொண்டு விட்டேன். என்னை புரிந்து கொள்ளக்கூடிய பெண் கிடைக்கும் போது, எனது திருமணம் நடைபெறும்,” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News