ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் மற்றும் ஆதி இணைந்து உருவாக்கும் படம் ‘சப்தம்’. இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆல்பா பிரேம்ஸ் மற்றும் 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.’சப்தம்’ ஒரு வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வருகின்றது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில்.

இதன் டீசர் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.