Wednesday, April 10, 2024

இன்றைய சினி ஃபைட்ஸ்!

Share

- Advertisement -

சூர்யா விலகியதால் வணங்கான் படத்தில் இருந்து விலகிய மமிதா பைஜூ? அட்லீயின் அடுத்த படம் சம்பளம் இவ்வளவா

- Advertisement -
- Advertisement -
  • சூர்யா விலகியதால் வணங்கான் படத்தில் இருந்து விலகிய மமிதா பைஜூ?

சமீபத்தில் அளித்த பேட்டியில் சூர்யா விலகியதால் தான் வணங்கான் படத்தில் இருந்து விலகினிர்களா? என்ற கேள்விக்கு அது உண்மை கிடையாது.எனக்கு கால் ஷீட் பிரச்சினை அதனால் தான் நான் விலகினேன். சூர்யா சார் விலகியது தாமதமாக தான் தெரியும் என கூறியுள்ளார்.

  • த கோட் ஓ.டி.டி உரிமை 110 கோடியா?

விஜய் நடித்து வரும் வெங்கட் பிரபுவின் தி கோட் திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடியவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை 110 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

  • அட்லீயின் அடுத்த படம் சம்பளம் இவ்வளவா

கோலிவுட்ல் இருந்து பாலிவுட்க்கு பறந்த அட்லி சம்பளமும் ஜவான் ப்ளாக் பஸ்டர்க்கு பிறகு உயரத்துக்கு பறந்துள்ளது.இவரின் படத்தில் நடிக்க பாலிவுட் ஹீரோக்கள் காத்துக்கொண்டு இருக்க அடுத்து அல்லு அர்ஜூன்ஐ வைத்து இயக்க போகும் அட்லி அந்தப் படத்திற்கு 60 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம் .

  • 13 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி – யாஸ்மின் பொன்னப்பா

ஆரண்ய காண்டம் படத்தில் கிளைமாக்ஸ் கட்சியில் பணப்பயோடு செல்லும் யாஸ்மின் பொன்னப்பா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு காணாமல் போனார். தற்போது இடி மின்னல் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வர உள்ளார்.

  • சாய் பல்லவி கூறிய சீக்ரெட் இணையத்தில் வைரல்!

டாப் மலையாள நடிகையான சாய் பல்லவி,”நான் ஷ்யாம் ஷிங்கா ராய் படத்தில் ஒரு கிளாசிக் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பேன்.அதை தவிர ரெளடி பேபி பாடல் உட்பட அனைத்து பாடல்களுக்கும் டான்ஸ் ஆடிய போது பீரியட்ஸ்-ல் இருந்தேன்.பிடித்த வேலையை செய்யும் போது மூளை வலியை மறக்க செய்யும் இருந்தாலும் டான்ஸ் ஆடிய பின்னர் வலி இருக்கும்.அப்போதெல்லாம் என் தந்தைதான் என் கால்களை பிடித்து விடுவார்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News