பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக பிரபலமான சாய் பல்லவி, தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். தற்போது, தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில், “நானும் தமிழ் பொண்ணுதான், ஊட்டியும் தமிழ்நாட்டில்தானே இருக்கு என கூறியுள்ளார்.

கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்ட சாய் பல்லவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அந்த படத்தின் மூலம் அவரை அனைவரும் மலர் டீச்சராகவே நினைவில் வைத்துள்ளனர்.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. தற்போதைய தகவலின்படி, ராமரின் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாம்.

இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது.சாய் பல்லவி குறித்து “தமிழ் பெண் இல்லை, கன்னடர்” என பரவிய செய்திகளால் அவர் கோபமடைந்து, “என்னுடைய சொந்த ஊர் படுகா, ஊட்டி பக்கத்தில் கோத்தகிரி பக்கத்தில்தான் இருக்கிறது. ஊட்டியும் தமிழ்நாட்டில்தானே, அப்போ நானும் தமிழ் பொண்ணுதான்” என உறுதியாகக் கூறியுள்ளார்.