இயக்குநர் நாக் அஸ்வின் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுத்து வெளியிட்டு பிரமாண்டமான வெற்றியை கண்டார். அந்த திரைப்படத்தில் படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
நடிகையர் திலகம் படத்தை தொடர்ந்து சுமார் 500 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக பல வருடங்கள் கழித்து பிரபாஸை வைத்து நாக் அஸ்வின் உருவாக்கியுள்ள கல்கி படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இப் படத்தில் கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது பலர் அறிந்ததே.
இப்படத்தில் பிரபாஸ் பைரவா கதாபாத்திரத்திலும் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கதாபாத்திரத்திலும் அசத்த வருகின்றனர். அப்போது கல்கி ஆக கமல்ஹாசன் நடித்து உள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமாக கல்கி அவதாரம் என கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் அமிதாப்பச்சனின் கதாபாத்திரம் குறித்த அறிமுக வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதே போல அமிதாப் பச்சனின் கதாபாத்திர வீடியோ அதிரடியாக வெளியானது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு குருவாக இருந்த துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா அனுமான் போலவே இன்னும் இந்த பூமியில் உயிருடன் உலாவி வருவதாக புராணக் கதைகள் இருக்கின்றன. அதை மையமாக வைத்து அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைத்திருக்கிறார் நாக் அஸ்வின்.