நடிகை நமிதா, தற்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.அதிலிருந்து 2006-ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்த அனுபவத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் தனுஷ் தனக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என கூறி, ஒரு படத்தின் தயாரிப்பாளர் அவரது கால்ஷீட்டை பெற்றுள்ளார்.

ஆனால் இறுதியில், தயாரிப்பாளரின் உறவினர் அந்தப் படத்தில் நாயகனாக நடித்து விட்டார். இது அறிந்ததும், மிகவும் கோபமடைந்து, பாதியிலேயே அந்தப் படத்தை விட்டு வெளியேறினார்.பின்னர், எப்படியோ அந்தப்படத்தை முழுமை செய்து ரிலீஸ் செய்தனர்.

அந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சில் மற்றும் நடிகர்கள் கவுன்சில் ஆகியவற்றில் நான் அப்போதே புகார் அளித்தேன் என நமிதா கூறியுள்ளார்.2006-ஆம் ஆண்டு, நமிதா கோவை பிரதர்ஸ், தகப்பன் சாமி, பச்ச குதிரை, மற்றும் நீ வேணும்டா செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில், ஜித்தன் ரமேஷ் நடித்த “நீ வேணும்டா செல்லம்” படத்தில் தயாரிப்பாளரின் மகன் ஹீரோவாக நடித்திருந்தார். இதுதான் நமிதா குறிப்பிடும் படம் என நெட்டிசன்கள் கமெண்ட் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.