Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

அள்ளி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட இவ்வளவா கொடுத்தாரு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நீண்ட நாள் கனவாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.‌ தற்போதுவரை சுமார் 40 கோடி அளவுக்கு கட்டுமான பணிகள் நிறைவுற்று மேலும் கட்டுமான பணிகளுக்கு 25 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நிதியுதவிகவை குவித்து வருகின்றனர்.

நடிகர் சங்கத்தை விரைவாக கட்டிமுடிக்க நிதி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்பாக விஜய் மற்றும் உதயநிதி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் ரூபாய் 50 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் நடிகர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் அவரது நிதியை நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் நடிகர் கார்த்தியிடம் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை விரைவில் கட்டி முடிக்க சங்கத்தினர் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கட்டப்படும் நடிகர் சங்க கட்டடத்திற்கு மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் பெயரை‌ சூட்ட வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக‌ இருந்துவருகிறது.நடிகர்கள் நடிகைகள் பலரும் அடுத்தடுத்து நடிகர் சங்கத்திற்கான நிதியுதவியை நடிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கொடுத்து வருவதாக தெரிகிறது இந்நிலையில் விரைவில் கட்டடப் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவை காணலாம் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News