Wednesday, April 10, 2024

அன்று ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர் இன்று தங்கலான் ஒதிப்பதிவாளர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவர உள்ள நிலையில் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.

கேமரா மேனா வரணும் அப்படின்ற ஆர்வம் எப்படி வந்துச்சு அப்படின்ற கேள்விக்கு, எங்க அண்ணா ஆர்டிஸ்ட் எங்களுடைய சொந்த ஊர் கும்பகோணம். நான் ஸ்கூல் படிக்கிறப்ப லைஃப்ல என்னவாக போறேன்ற ஐடியாவே எனக்கு இல்ல ஆனாலும் என் அண்ணனோட ஓவியங்கள் எல்லாம் எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்துச்சு என்கிறார்.

காலா, கபாலி பட ஒளிப்பதிவாளர் முரளி அண்ணாவும், என்னுடைய அண்ணனும் கும்பகோணம் கவின்கல்லூரி கல்லூரி பேட்ச் மேட்ஸ். நானும் சில மாதங்கள் ஃபைன் ஆர்ட்ஸ் கோச்சிங் போனேன் அதுல லைட்டிங் கலர்ஸ் கலை வடிவத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சினிமா உள்ள வர ஆர்வம் முரளி அண்ணா கொடுத்த மோட்டிவேஷன்.முரளி அண்ணாவோட காலா, கபாலி, சார்ப்பட்டா பரம்பரைனு பல படங்களில் வேலை செஞ்சேன்.

குண்டு அப்டின்ற படம் தான் முதல் படம் இத நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிச்சது. அந்த படத்துல என்னோட வேலை நல்லா இருந்ததுனால பா.ரஞ்சித் அண்ணா அவரோட அடுத்த படத்துல ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொன்னார். அவர் சொன்ன மாதிரி நட்சத்திரம் நகர்கிறது அப்படி என்ற படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தை என்னதான் வராட்டி இருந்தாலும் ஒரு பக்கம் பெருசா எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்ல.

நம்ம வேலை ஒழுங்கா போய் மக்களை சேரலையோ அப்படின்ற மாதிரி நான் தயக்கத்தோடு இருந்தேன் அப்படி இருக்கும்போது தான் பா.ரஞ்சித் அண்ணா இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தார் அதுதான் தங்கலான். இந்த படத்துல மறுபடியும் பா ரஞ்சித் அண்ணா கூட வேலை செய்றது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

ஒரு ஒளிப்பதிவாளருக்கும் இயக்குனருக்கும் இடையில சரியான புரிதல் இருந்தால் தான் ஒரு படத்தை நல்லா எடுத்து வெளி கொண்டு வர முடியும். அப்படி புரிதல் எங்க ரெண்டு பேரு கிட்டயும் இருந்தது. பா.ரஞ்சித் அண்ணா எனக்கு என்ன தேவை அப்படிங்கறதில அவர் தெளிவாக இருந்தாரு. அது மட்டும் இல்லாம ஒட்டு மொத்த டீமும் சரியா கையாண்டார்.

கும்பகோணத்தில சேது படத்தோட படப்பிடிப்பு நடக்கும் போது அங்க வேடிக்கை பாக்குற கூட்டத்துல இருந்த நான் அவருடைய படத்துக்கு இப்போ ஒளிப்பதிவு பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல நான் கூட பாக்கல. இத விக்ரம் சார் கிட்ட சொன்னப்ப அவர் ரொம்பவே நெகிழ்ந்து போனார்.

அதை தொடர்ந்து, படப்பிடிப்பு சமயத்துல பா. ரஞ்சித் அண்ணா கிட்ட சொல்லி விக்ரம் சார் கிட்ட வேலை வாங்கலாம் அப்படினு இருந்தேன். ஆனா பா ரஞ்சித் அண்ணா நீயே சொல்லு அது தான் கரெக்ட்டா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டாரு. விக்ரம் சார் நல்ல அனுபவசாலி டெக்னீசியனுக்கு உரிய மரியாதைய கொடுப்பாரு என பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

Read more

Local News