நடிகை லைலா, விஜயகாந்த் நடித்த ‘கள்ளழகர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு, பிதாமகன், நந்தா, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக விளங்கினார்.

கடந்த ஆண்டு விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த லைலா, தற்போது ஆதி நடித்த ‘சப்தம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை லைலா அளித்துள்ள பேட்டியில் அதிக சிரிப்பால் நான் அவதிப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தனக்கு சிரிப்பு அதிகமாக கட்டுப்பாடின்றி வரும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதை நிறுத்த முயன்றால் கண்களில் இருந்து தானாகவே கண்ணீர் வழியும் என்றும் கூறியுள்ளார்.அதேபோல், ‘பிதாமகன்’ படப்பிடிப்பு நடந்தபோது, ஒரு நிமிடம் கூட சிரிக்காமல் இருக்க முடியுமா என்று விக்ரம் சவால் விட்டார். ஆனால் தனது சிரிப்பை 30 வினாடிகளுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், அதன் விளைவாக கண்ணீரால் முழு மேக்கப்பும் வீணானது என்றும் லைலா நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.