Wednesday, April 10, 2024

அஜித்தின் ‘விடா முயற்சி’ எப்போது திரைக்கு வரும்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தில் அஜித்குமாருடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் பல நாட்கள் நடந்தது. வெளிநாடு என்பதாலும், அதிக நாட்கள் படப்பிடிப்பு என்பதாலும் பட்ஜெட் அதிகமானதால் படக்குழு ஒரு கட்டத்தில் சென்னை திரும்பியது. மறுபடியும் எப்போது படப்பிடிப்பு என்பதை அஜித்குமாருக்கு தெரிவிக்கவில்லை. இதனால், அஜித்குமார் பைக் டூர் சென்றார்.

‘விடாமுயற்சி’ படத்தின் எடுத்த காட்சிகள் வரை எடிட் செய்து போட்டு பார்த்த இயக்குனர் மகிழ் திருமேனி இன்னும் இருபத்தி ஏழு நாட்கள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்க வேண்டும் என்பதை தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் அஜித்துக்கு தெரிவிக்கப்பட்டதும் படப்பிடிப்பிற்கு தேதி கொடுத்த அஜித், வெளிநாடு செல்லும் முன் உடல் பரிசோதனைக்கு சென்றார். அப்போது அவருக்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் சின்ன பிரச்சினை இருந்ததால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அஜித்குமார் அறுவை சிகிச்சைக்கு தயாரானார். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. உடல்நிலை தேறி வந்ததும் கடந்த வாரம் அஜித்குமார் அஜர்பைஜான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

பதினைந்து நாட்கள் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து அவரது காட்சிகளை முடித்துக் கொடுக்கும் அஜித், சென்னை திரும்பியதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

‘குட் பேட் அக்லி’ படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் அந்தப் படத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், இந்த ஆண்டில் அஜித்குமார் நடிக்கும் இரண்டு படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News