Saturday, July 13, 2024

வேட்டையன் படத்தில் நடிக்க தயங்கிய பகத் பாசில்… ஞானவேல் போட்ட ஸ்கெட்ச்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பகத் பாசில் என்ற பெயரை கேட்டாலே ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளுவார்கள் என்றால் அவருடைய தனித்துவமான நடிப்பு தான் காரணம்.மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் பகத் பாஸில் தமிழிலும் ஓரிரு படங்களின் மூலமே பல ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ரிலீஸான விக்ரம் திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலம் மிரட்டி இருந்தார்.அவரின் என்டிரியை கண்டு திரையங்கையே அதிர விட்டார்கள் ரசிகர்கள்.பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் ரத்னவேல் என்ற கதாபாத்திரத்தில் சம்பவம் செய்து நடிப்பில் அசத்திருந்தார பகத் பாஸில்.

இவ்வாறு தொடர்ந்து மலையாள சினிமா மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை பெற்றுவரும் பகத் பாஸில் ஜெய் பீம் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தில் நடிக்கும் வாப்பை பெற்றார்.பகத் பாஸில் இந்த படத்தில் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானது ரஜினிக்கு வில்லனாக மிரட்ட போகிறார் என எதிர்பார்ப்பை அதிகமாக தூண்டியது.

ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக பகத் பாஸில் காமெடி கேரக்டரில் வேட்டையன் படத்தில் நடிக்கிறார் என தெரியவந்தது.மிரள வைக்கும் வில்லனாக நாம் கண்ட பகத் பாஸில் காமெடி கேரக்டரில் நடிப்பது ஆச்சரியத்துடன் எதிர்பார்ப்பையும் எழுப்பி உள்ளது.இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்பதால் அவர் இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டார் என ஒருபுறமும் ஆரம்பத்தில் காமெடி கேரக்டர் என்றவுடன் பகத் பாசில் நடிக்க தயங்கியதாகவும் பின்னர் இயக்குனர் கதாபாத்திரத்தை விளக்கியவுடன் நடிக்க ஒப்புக் கொண்டதாக மறுபுறமும் தகவல் பரவுகின்றன.

எது எப்படியோ அவர் வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவர் இணைந்து நடிப்பது அதுவும் வித்தியாசமான காமெடி கேரக்டரில் நடிப்பது ரசிகர்களுக்கு ஆர்வத்தையும் மேலும் வேட்டையன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது.

- Advertisement -

Read more

Local News