Tuesday, November 5, 2024

வெங்கட் பிரபுவுக்கு வலைவிரித்த சிவகார்த்திகேயன்? SK25 கதைக்கு கண்டிஷன் போட்ட சிவா….

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுக்கு வலைவிரித்து உள்ளார். ஆம், டாப் 10 நடிகர்களில் டாப்-ல் இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டும் இல்லாமல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் பட்ஜெட் வாய் பிளக்க வைத்துவிடும் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் இந்த அமரன் படம் உருவாக உள்ளது.

அமரன் படத்தை ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் SK23 படத்தில் சிவகார்த்திகேயன் பிஸியாக உள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்காமல் இழுபறியில் இருக்கிறது. விரைவாக நடந்து வரும் SK23 படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து SK24 படத்தை இவருடைய நண்பர் சிபி சக்கரவர்த்தியுடன் இணையப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை தொடர்ந்து தி கோட் இயக்குனர் வெங்கட் பிரபுக்கு தலைவிரித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.தனது 25வது படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று வெங்கட் பிரபுக்கு தூது அனுப்பியுள்ளார்.

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவை லாக் செய்ய அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் அதில் வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயனிடம் ஒரு சூப்பரான கதையை சொல்லியதாகவும் அதற்கு அவர் இது 25வது படம் என்பதால் மேலும் ஸ்கிர்பிட் பலமாக இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

அதற்கு வெங்கட் பிரபுவும் மங்காத்தா, மாநாடு, தி கோட் படம் போல் உங்களுக்கு 25வது படம் தனி வெற்றி முத்திரை பதிக்கும் படமாக அமைய நான் கேரண்டி என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார்.தி கோட் படப்பிடிப்பை முடிந்த சில காலத்தில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News