Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ரசிகர்கள் அளித்த தைரியம் மற்றும் அன்பினால் இந்த உயரத்தை அடைந்துள்ளேன்… அவர்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் – மம்மூட்டி நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரள திரையுலகில் சிறந்து விளங்கும் நடிகர்களில் ஒருவராக மம்முட்டி திகழ்கிறார். இவருடைய நடிப்பில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான ‘டர்போ’ என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமா வாழ்க்கையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துவரும் மம்முட்டி, “சினிமா இல்லை என்றால் நானும் இல்லை” என்று கூறியதற்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு, படங்கள் எனக்கு மூச்சு விடுவதற்கு நிகரானவை. சினிமா இல்லையெனில் நான் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக ரசிகர்கள் அளித்த தைரியம் மற்றும் அன்பினால் இந்த உயரத்தை அடைந்துள்ளேன். அவர்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன், என்று தெரிவித்தார்.

மேலும், ஆனால், அவர்கள் என்னை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பார்கள் என்பது எனக்கு தெரியாது. ஒரு வருடமா? பத்து வருடமா? அல்லது பதினைந்து வருடங்களா? அதுவே அதிகம். உலகம் முடியும் வரை மக்கள் என்னை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவே முடியாது. அது யாருக்கும் சாத்தியமானதல்ல. ஆயிரக்கணக்கான நடிகர்களில் நானும் ஒருவனாகவே உள்ளேன்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

- Advertisement -

Read more

Local News