Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

சிவப்பு மார்டன் உடையில் சிவப்பு ரோஜாவை போல் மிளிரும் மாளவிகா மோகனன் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில வருடங்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் வெளியான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் மாளவிகா மோகனன். நல்ல உயரம், அசர வைக்கும் கட்டழகு என நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்தார். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் இவர் அதிகம் இருந்தது மும்பையில்தான்.

ஏனெனில், மும்பையில் செட்டிலானது இவரின் குடும்பம். கோலிவுட், பாலிவுட் என கலக்க வேண்டும் என்பது அவரின் ஆசை. ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தார். மாளவிகாவின் அப்பா நடன இயக்குனராக வேலை செய்தவர். அப்போது அப்பாவுக்கு உதவி செய்ய படப்பிடிப்புக்கு போனபோது சினிமா வாய்ப்புகள் வந்தது. அம்மணியின் வாளிப்பான அழகை பார்த்து கோலிவுட்டில் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படத்தில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. கிளாமர் நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டவருக்கு சீரியஸான வேடம். ஆனாலும், நன்றாகவே நடித்திருந்தார். அதன்பின் விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகள் குறைவாகவே இருந்தது. அதன்பின் தனுஷுடன் மாறன் படத்தில் திறமை காட்டினார். ஆனால், அந்த படமோ ஓடவில்லை. இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளில் அழகை விதவிதமாக காண்பித்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -

Read more

Local News