தமிழ் சினிமாவில் புலி, வலிமை, விக்ரம், மாஸ்டர், வாரிசு என பல மெகா படங்களுக்கு டிரோன் கேமராமேனாக பணியாற்றியுள்ளவர் தான் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜன்.இவர் தற்போது கோட் மற்றும் இந்தியன் 2 படங்களிலும் டிரோன் கேமராமேனாக பணியாற்றிருக்கிறார். இவர் அண்மையில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கோட் மற்றும் இந்தியன் 2 படங்களில் வேலை செய்ததை குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர், ஷங்கர் சாரோட இயக்கத்தில கமல் சார் நடிக்குற மிகவும் பிரம்மாண்டமா ரெடி ஆகியிருக்குற படம் தான் இந்தியன் 2 இந்த படத்துல வேலை செய்ய வாய்ப்பு கிடச்சத பெரிய வரமாவும் பாக்கியமாவும் நினைக்கிறேன்.

நான் இந்த படத்துல எடுத்த ஒரு ஷாட்டை பார்த்த விட்டு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்டெலிபோன் மணிபோல் சிரிப்பவளா பாட்டில ஆஸ்திரேலியாவுல ஒரு ஷாட் எடுத்திருப்பாங்க அந்த மாதிரி இருக்குனு சொன்னாரு.இப்படி அவர் சொன்னத கேட்ட எனக்கு சந்தோஷத்தில பேச்சு வரல.எவிக்ரம் படத்திலயும் கமலும் பகத் ஃபாசிலும் சுவர் மேல நிக்குற இன்டர்வல் ஷாட் ஷுட் பண்ற வாய்ப்பு கிடைச்சது.

அதே மாதி கோட் படத்தோட கேரளா மற்றும் ரஷ்யாவில் எடுத்த ஷுட்ங்ல வேலை செஞ்சுருக்கின்.ரஷ்யாவுல வெளி இடங்களில வேற நாட்டு டெக்னீசியன் வேலைய செய்ய பர்மிஷன் இல்லை.அதனால பிரைவேட்ட ஏரியாவுல தான் அந்த போர்ஷன் எல்லாம் ஷூட்டிங் பண்ணோம்.அத தளபதி விஜய் பார்த்துட்டு வெறித்தனம்னு மெசேஜ் போட்டாரு இது போதும் எனக்கு அந்த சீன் பத்தி ரிவீல் பண்ண முடியாது. அந்த போர்ஷன் வந்தா நிச்சயம் தியேட்டர் தெறிக்கும் என பாண்டியராஜனின் மகன் பிரேமராஜன் பகிர்ந்துள்ளார்.
