கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியான படம் சர்தார். இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கார்த்தி இதில் இரண்டு வேடங்களில் நடித்தார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000050967-1024x576.jpg)
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சர்தார் 2 படத்தின் பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இடையில் படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சி கலைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் படக்குழு கொடுத்த தகவலின்படி, இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது நடிகை ஆஷிகா ரங்கநாத் படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆஷிகா ரங்கநாத் கன்னட திரைப்படமான க்ரேசி பாய் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின் பல கன்னட திரைப்படங்களில் நடித்தார். 2022 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சித்தார்த் நடிப்பில் வெளிவர இருக்கும் மிஸ் யூ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.