Saturday, September 14, 2024

ஒரு சிறிய தமிழ் திரைப்படத்தை உலகளவில் ஃபேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலகளவில் மிகவும் பிரபலமான ஆப்பிள் நிறுவனம், தங்களது மேக்புக், ஐபோன், ஐபாட் போன்ற சாதனங்களில் ஓபன் ஏஐ டூல்களை இனி பயன்படுத்தலாம் என ஆப்பிள் சிஇஓ டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். அதை கண்டித்து ரீட்வீட் செய்த எலான் மஸ்க், ஐபோன், ஆப்பிள், டேட்டா ஆகியவற்றை மையமாக வைத்து, ‘தப்பாட்டம்’ படத்தில் இருந்து உருவான ஒரு மீம்ஸ் பகிர்ந்துள்ளார். 2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில், துரை சுதாகர் மற்றும் டோனா ரொசாலியோ நடித்த அந்த படத்தில், ஒரு இளநீரை நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, நாயகன் நாயகியின் வாயிலிருந்து ஸ்டிராவை கொண்டு குடிக்கும் காட்சி பல மீம்ஸ்களாக பரவி இன்று வரை ட்ரெண்டானது. அதை இன்று எலான் மஸ்க் பகிர்ந்ததற்கு, ஒரு சிறிய தமிழ் திரைப்படம் உலகளவில் பிரபலமாகிவிட்டது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News