![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/GK-aIghXgAAf-7V-1024x682.jpeg)
நடிகர் அருண் விஜய், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்து கடைசியில் விலகிய வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவருடைய 36 ஆவது படத்தின் பூஜை சமீபத்தில் நிகழ்ந்தது.இந்த படம் சிறப்பாக அமைய பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/GL7E7ngaoAAPGx7-819x1024.jpeg)
அருண் விஜய் நடிக்கும் இப்படத்திற்கு இரட்ட தல என பெயரிடப்பட்டுள்ளது.சற்றே வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் அருண் விஜய் நடிக்க போகிறார் என்பது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே உணர்த்துகிறது.இப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்து மிகப்பெரிய வரவேற்பைப்பெற்ற மான் கராத்தே படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார்.அருண் விஜய் உடன் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ் போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/GL0u3QLbMAAPXb9-1024x896.jpeg)
இந்த ரெட்ட தல படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.மேலும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருண் விஜய் இரண்டு கெட்டப்புகளில் இருக்கிறார். ஒருவருக்கொருவர் மல்யுத்தம் செய்வது போல் வெளியான இந்த போஸ்டர் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்போதே படம் தாறுமாறு ஹிட் வேற லெவலாக இருக்கும் என மகிழ்ச்சியில் பொங்கி வருகின்றனர்.