சென்னையில் புகழ்பெற்ற ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் யு.பி. சீனிவாசன் ‘ஜண்ட மட்டான்’ எனப்படும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். முன்னணி இசை நிறுவனம் சரிகம, இந்த ஆல்பத்தை பாராட்டி அதன் உரிமையை வாங்கியுள்ளது.

இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், இயக்குநர் மந்திரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடன இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கந்தாஸ், நடிகர் மகேந்திரன் மற்றும் கே.பி.ஒய். சரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பாரீசில் மருத்துவத்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற டாக்டர் சீனிவாசன், கலைத்துறையிலும் ஆர்வமுள்ளவராக இருக்கிறார்.
இதன் விளைவாக, தனது மருத்துவ பணிகளுக்கு இடையே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.நாகர்கோயில் மவ்வட்டின் வட்டார வழக்கை நன்கு அறிந்தவரான டாக்டர் சீனிவாசன் ‘ஜண்ட மட்டான்’ பாடலை எழுதியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர்கள் ஹெச்.ஹூமர் எழிலன் மற்றும் ஹெச். சாஜஹான் இசையமைத்துள்ளனர். மிகுந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த ஆல்பத்தை ‘சரிகம’ நிறுவனம் வெளியிடுகிறது.