தற்போது தமிழ் நடிகர்கள் மற்ற மொழிகளில் நடிக்கவும் மற்ற மொழி நடிகர்கள் தமிழ் மொழியில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருவதைப்போல இங்குள்ள இயக்குனர்களும் பிறமொழி படங்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் இயக்குனர் ஒருவர் சல்மான் கானை நம்பி பாலிவுட் பக்கம் சென்றார் ஆனால் அவருக்கு நேர்ந்த கதியோ அய்யோ பாவம் என்றளவுக்கு ஆகிவிட்டது.
சல்மான்கானை நம்பி சென்ற நிலையில் சல்மான் கான் வேறு ஒரு இயக்குனரை கமிட் செய்துவிட்டாதால் படம் இல்லாமல் திணறிக்கொண்டு கையோடு இருக்கிறார் அஜித்துக்கு பில்லா என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன்.
இயக்குனர் விஷ்ணுவர்தன் சல்மான்கான்-ஐ வைத்து படம் எடுக்கலாம் என்று பாலிவுட் பக்கம் சென்றார்.அப்போது விடாமுயற்சி படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில் அஜித் இயக்குனர் விஷ்ணுவர்தனை அணுகியிருக்கிறார்.ஆனால் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் பிஸியாக இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார்.
தற்போது ஏஆர் முருகதாஸ் உடன் கூட்டணி போட்ட சல்மான் கான் கடைசியில் கிரீன் சிக்னல் காட்டியது ஏஆர் முருகதாஸ்க்கு தான். சிவகார்த்திகேயனின் SK23 படத்தை இயக்கி வரும் முருகதாஸ் இப்போது சல்மான் கானின் சிக்கந்தர் படத்திற்கான வேலையிலும் இறங்கி உள்ளார்.
மேலும் சல்மான் கானின் கால்ஷுட் கையில் இருக்கிறது என கெத்தாக சுற்றிய விஷ்ணுவர்தன் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருக்கிறாராம். இப்போது தமிழ் நடிகர்கள் படத்தில் நடிக்க பெரிதாக யாரும் முன் வரவில்லை.கடைசியாக பாலிவுட்டிலேயே வேறு யாராவது நடிகரை வைத்து படம் எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.