சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான லிட்டில் ஹார்ட்ஸ் திரைப்படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதில் மவுலி மற்றும் ஷிவானி நகரம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காத்யாயனி என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஷிவானி நகரம் நடிகை மட்டுமல்ல, பாடகியும், குச்சிபுடி நடனக் கலைஞரும் ஆவார். 1998 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே குச்சிபுடி பயிற்சி பெற்றார். பின்னர் வில்லா மேரி கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். கடந்த ஆண்டில் வெளியான அம்பாஜிபேட்டை மேரேஜ் பேண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்பு ஜாதி ரத்னாலு படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது லிட்டில் ஹார்ட்ஸ் படத்தில் காத்யாயனியாக நடித்துள்ள அவர், இளைஞர்களின் மனதை கவர்ந்து வருகிறார். அடுத்து சுஹாஸ் நடிக்கும் ஹே பகவான் படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.