Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பல கோடிகளை கரியாக்கிட்டாரு… அக்ஷய் குமாரை வறுத்தெடுத்த ரசிகர்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த வாரம் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சிரிக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அந்த புகைப்படத்திற்கு “Smile, it confuses people” என்ற கேப்ஷனையும் கொடுத்திருந்தார். ஆனால், அந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரோல் செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக அக்‌ஷய் குமாரின் பல படங்கள் வெற்றியடையாமல் தோல்வியை சந்தித்துள்ளன. பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க விரும்பி சரியான திரைக்கதையையும் இயக்குநரையும் தேர்வு செய்யாமல் பல முன்னணி நடிகர்கள் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது சமீபத்திய படமான படே மியான் சோட்டே மியான் படுதோல்வியடைந்து 350 கோடி ரூபாய் நஷ்டமாகியுள்ள நிலையில், அக்‌ஷய் குமார் ட்விட்டரில் சிரிக்கும் புகைப்படம் பதிவிட்டதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News