சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்கள் வந்தன.ஹிந்தியில், அக்ஷய்குமார் நடித்த ‘கேல் கேல் மெய்ன்’, ஜான்ஆபிரகாம் நடித்த ‘வேதா’, ராஜ்குமார் ராவ் நடித்த ‘ஸ்த்ரீ 2’ ஆகிய படங்களும், தமிழில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’, அருள்நிதி நடித்த ‘டிமான்ட்டி காலனி 2’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரகு தாத்தா’ ஆகிய படங்களும், தெலுங்கில் ரவி தேஜா நடித்த ‘மிஸ்டர் பச்சன்’, ராம் பொத்தினேனி நடித்த ‘டபுள் ஐ ஸ்மார்ட்’, மலையாளத்தில் பாசில் ஜோசப் நடித்த ‘நுணகுழி’, சிஜு சன்னி, அமித் மோகன் நடித்த ‘வாழ – பயோபிக் ஆப் எ பில்லியன் பாய்ஸ்’, ரதீஷ் சுந்தர் நடித்த ‘மாவோயிஸ்ட்’ ஆகிய படங்களும் வெளிவந்தன.அதிக வசூலைக் குவிக்கப் போட்டி போடும் படங்கள் என்றால் ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படங்களைச் சொல்லலாம். அவற்றில் நேற்றைய முதல் நாள் வசூலில் மற்ற படங்களைக் காட்டிலும் ஹிந்திப் படமான ‘ஸ்திரீ 2’ படம் இந்தியாவில் மட்டும் 76 கோடியே 50 லட்சம் வசூலித்துள்ளது.
சுதந்திர தினத்தன்று வெளியான10-க்கும் மேற்பட்ட படங்கள்…முதல் நாள் வசூலில் சாதனை படைத்த ஸ்த்ரீ-2 !
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more