நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘கூலி’ திரைப்படத்தில் நடிகர் அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவலை இப்படத்தில் நடித்துள்ள உபேந்திரா உறுதிபடுத்தியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது உபேந்திரா பேசும்போது, “நான் ஏகலவனாக இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு துரோணாச்சாரியார் போன்றவர்” என கூறினார். அப்போது செய்தியாளர்கள், “அமீர் கான் கூலி படத்தில் நடித்துள்ளாரா? என்று கேள்வி எழுப்ப, அவர் “ஆம், நடித்துள்ளார்” என்று உறுதியாக பதிலளித்தார்.