Saturday, September 14, 2024

கிரேசி மோகன் நினைவின் பக்கங்கள் என்னுள் புரள்கின்றன… நண்பரின் பிரிவை எண்ணி வருத்தப்பட்ட கமல்ஹாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் வசனகர்த்தா என பல்வேறு திறமைகளை தன்னுள் கொண்டிருந்த கிரேசி மோகன் தொடக்கத்தில் ஒரு மேடை நடிகராகவும் நாடக கலைஞராகவும் இருந்தார்.உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நெருங்கிய நண்பராகவும் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர்.

கிரேசி மோகன் 2019ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி காலமானார்.அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகின்றன.கிரேசி மோகன், கமல்ஹாசனுடன் தெனாலி, வசூல்ராஜா, பஞ்சதந்திரம், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட படங்களுக்கு நகைச்சுவை வசனம் எழுதியுள்ளார். 600க்கும் மேற்பட்ட நகைச்சுவை தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.

கமல்ஹாசன், கிரேசி மோகன் நினைவு நாளில் எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்: “எடுத்த வேலையை தனித்தன்மையோடு வெற்றிகரமாக முடிப்பதே தன் திறனெனக் காட்டி வாழ்ந்த நண்பர் கிரேசி மோகன் நினைவு நாள் இன்று. எத்தனையோ வேலைகளை இணைந்து செய்திருக்கிறோம் இடைவேளை விட்டது போல் எங்கேயோ போய்விட்டார். அவரது நினைவின் பக்கங்கள் என்னுள்ளே புரள்கின்றன”. இவ்வாறு கமல்ஹாசனின் இந்தப் வருத்தமான பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News