Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

காதலருடன் தாய்லாந்தில் சுற்றும் நடிகை வரலட்சுமி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதன் பிறகு தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்தார். இப்போது தனுஷ் நடித்து வரும் ‘ராயன்’ படத்திலும், மலையாளத்தில் தயாராகி வரும் ‘கலர்ஸ்’ படத்திலும், தெலுங்கு மொழியில் ‘சபரி’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

பதினான்கு ஆண்டுகளாக மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த வரலட்சுமி கடந்த மாதம் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். விரைவில் திருமணம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காதலர் நிக்கோலாய் சச்தேவுடன் தாய்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து வரும் வரலட்சுமி, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்தப் புகைப் படங்களை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே காதலனுடன் ஹனிமூன் சென்றுள்ளார் என்று விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News