‘டாடா’ படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த நடிகர் கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். ‘டாடா’ படத்திற்கு பிறகு ‘ஸ்டார்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
அந்தப் பாடலின் முன்னோட்ட காட்சி நேற்று வெளியானது.
அடுத்து நடன இயக்குனரான சதிஷ் இயக்கத்தில் ‘கிஸ்’ என்கிற படத்தில் கவின் நடித்து வருகிறார். அதன் பிறகு அறிமுக இயக்குனரான விக்கிரனன் அசோக் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ஆண்ட்ரியாவுக்கு நெகட்டிவ் கேங்ஸ்டர் கதாபாத்திரம் என்றும் அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.