Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கதையே கேட்காமா இந்த படத்துல கமிட்டானேன்‌… கவர்ச்சி உடையில் வந்து கவர்ந்த ராஷி கண்ணா – அரண்மனை 4 ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சுந்தர் சி சில படங்கள் சிறப்பான கவனத்தைப் பெற்றாலும், முக்கியயாக அவரது அரண்மனை படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற போதிலும், மூன்றாவது பாகம் எதிர்பார்த்ததைவிட குறைவான வரவேற்பையே பெற்றது. எனினும், சுந்தர் சி நம்பிக்கையுடன் நான்காவது பாகத்தை உருவாக்கியுள்ளார்.

ராஷி கண்ணா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு போன்றோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மே 3 அன்று வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு தொடர்ந்து பிரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு ரசிகர்களை கவரும் விதமாக பிரமோஷன் நடத்தப்பட்டது.

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தமன்னா ஹோம்லியாக சேலை அணிந்து கலந்துகொண்டார். ஆனால், ராஷி கண்ணா கவர்ச்சியான உடையில் வந்து அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தார். அவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்நிகழ்ச்சியில் பேசிய ராஷி, அரண்மனை 4 படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், அதனால் கதை பற்றி எதுவும் கேட்காமல் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். மேலும், இந்தப் படம் சிறப்பான கொண்டாட்டமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News