நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் கங்குவா திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் மற்றும் திஷா பதானி நடித்துள்ள இந்த படம் தீபாவளி பண்டிகைக்காக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுவரை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. 3D தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கங்குவா திரைப்படம் இந்தியில் மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவிக்கும் என கூறப்படுகின்றது.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கிய கார்த்திக் சுப்புராஜ், சூர்யாவின் 44-வது படத்தை இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், அந்த படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன.
அந்தமானில் உள்ள போர்ட் பிளேயர் துறைமுகத்தில் சூர்யாவின் 44-வது படத்தின் சண்டைக் காட்சிகள் முதலில் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்தமானுக்கு செல்லும் முன், சூர்யா சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்; அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவியுள்ளன. வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்து நீண்ட தலை முடியுடன் சூர்யா சாமி தரிசனம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
