நதியாவுடன் இணைந்து நடிக்கிறார் யோகிபாபு !

1985-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘பூவே பூச்சூடவா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் நதியா. பிறகு திருமணமாகி சினிமாவை விட்டு விலகி கணவருடன் லண்டனில் குடியேறினார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி குணசித்திர வேடங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில்  இவர் நடிக்கும் புதிய படத்தில்,   நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் நடிக்கிறார். ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நதியாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை யோகிபாபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/yogi-babu-will-act-alongside-nadia-890457