Monday, September 27, 2021
Home சினிமா செய்திகள் சமுத்திரக்கனி, யோகிபாபு நடிக்கும் 'யாவரும் வல்லவரே' திரைப்படம்

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிக்கும் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம்

Thee Commity Picture நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் C.ஆனந்த் ஜோசப்ராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படம் யாவரும் வல்லவரே.’

பல்வேறு களங்களில், தரமான படைப்பாக, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வால்டர்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற வெற்றிப் படங்களை  தந்தவர் 11:11 Production நிறுவனத்தின் தயாரிப்பாளரான Dr.பிரபு திலக்.

இவர் தற்போது இயக்குநர் அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் முதன்மை  கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவரது பார்டர்’ படத்தை தனது நிறுவனம் மூலம்  வெளியிடவுள்ளார்.

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை குவித்திருக்கும் இப்படம், வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்தாக தற்போது  இயக்குநர் N.A.ராஜேந்திர சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ என்னும் புதிய படத்தையும் வெளியிடவுள்ளார்.

இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இணைந்து நடிக்க, இவர்களுடன் தமிழின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

மேலும், நான் கடவுள்’  ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவராசு, போஸ் வெங்கட், மெயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நாதகுமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு –  Jais, இசை – N.R. ரகுநந்தன், படத் தொகுப்பு – ராம் ROA, பாடல்கள் – பொன் முதுவேல், தீபா செல்வா, ஆதிராய், பாடகர்கள் : G.V.பிரகாஷ்குமார், N.R.ரகுநந்தன், பத்மலதா, மற்றும் லிஜேஷ் குமார்.

விநியோகஸ்தர் Dr.பிரபு திலக் இந்தப் படம் குறித்துப் பேசும்போது, “நாங்கள் வெளியிட்ட ‘வால்டர்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற படங்களின் பிரமாண்டமான வெற்றி,  தரமான படைப்புகளை  ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள், என்கிற நம்பிக்கையையும், சிறந்த கதைகள் கொண்ட படங்களை உருவாக்கும் ஊக்கத்தையும் எங்களுக்குத் தந்துள்ளது.

மேலும்  எங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியாகவிருக்கும், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர்’ படத்தின் முன் வெளியீட்டு பணிகளுக்கு, ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த உற்சாக தருணத்தில் எங்களின் அடுத்த படைப்பாக ‘யாவரும் வல்லவரே’ படத்தை அறிவிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ஹைப்பர் லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது.

இயக்குநர் N.A.ராஜேந்திர சக்ரவர்த்தி இந்தப் படத்தின் திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும், படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். மேலும் கதையில் எதிர்பாராத பல திருப்பங்களும், கதையின் போக்கில் அவிழும் பல முடிச்சுகளும் இப்படத்தை பெரிய திரையில் காணும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தின. உடனடியாக இப்படைப்பில் இணைய ஒப்புகொண்டதற்கு இதுதான் முதன்மை காரணம்.

இது தவிர  சமுத்திரகனி, யோகி பாபு  போன்ற திறமைமிக்க நடிகர்களுடன் இணைந்து நடிக்கவுள்ள தமிழின்  முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தை ஒரு உயர்ந்த படைப்பாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்..” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

பேய் மாமா – சினிமா விமர்சனம்

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் ஏலப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக...

‘வீராபுரம்-220’ – சினிமா விமர்சனம்

ஸ்ரீவைசாலி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் குணசேகரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக ‘அங்காடி தெரு’ புகழ் மகேஷ் நடித்திருக்கிறார். நாயகியாக...

ச்சூ மந்திரக்காளி – சினிமா விமர்சனம்

அன்னம் மிடியாஸ் சார்பாக தயாரிப்பாளர் அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரித்துள்ளார். புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன்...

சின்னஞ்சிறு கிளியே – சினிமா விமர்சனம்

செண்பா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்நாதன் இந்த ‘சின்னஞ்சிறு கிளியே’ படத்தைத் தயாரித்திருக்கிறார்..! இந்தப் படத்தில் செந்தில்நாதன், சண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், குள்ளப்பள்ளி...