Friday, January 22, 2021
Home சினிமா செய்திகள் பிரபல ஒளிப்பதிவாளர் K.V.குகன் இயக்கும் திரில்லர் திரைப்படம் ‘WWW’(Who, Where, Why)

பிரபல ஒளிப்பதிவாளர் K.V.குகன் இயக்கும் திரில்லர் திரைப்படம் ‘WWW’(Who, Where, Why)

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான K.V.குகன், இந்திய திரை உலகில், பலராலும் கொண்டாப்படும், மதிப்பு மிகுந்த நபர்களில் ஒருவர்.

அவர்  தெலுங்கில் 118’ படம் மூலம் ஒரு இயக்குநராக அறிமுகமானார். இந்தத் திரில்லர் திரைப்படம், தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றி தெலுங்கில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளுக்கும் பரவியது. பல தென்னிந்திய மொழிகளில் இப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

இப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து தற்போது WWW’(who, where, why)” எனும் தலைப்பில் தனது புதிய படத்தை இயக்குகிறார் K.V.குகன்.

Ramantra Creations நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரில்லர் டைப் படத்தில் ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குவதுடன் படத்தின் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார் K.V.குகன். Ramantra Creations நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் Dr.ரவி, P.ராஜு டட்லா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். விஜய் தரன் டட்லா இணை தயாரிப்பு செய்கிறார்.

தொடர்ச்சியாக வெற்றிகரமான ஆல்பங்களை தந்து வரும் சைமன்.K.கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தம்மி ராஜு படத் தொகுப்பு செய்ய, K.N.விஜயகுமார் வசனமெழுதியுள்ளார். பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பு செய்ய, மதன் கார்க்கி, கு.கார்த்திக் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக சுரேஷ் சந்திரா பணியாற்றுகிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது.

இப்படத்தின் படபிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் குறித்து ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான K.V.குகன் பேசும்போது, “இந்த WWW’ திரைப்படம் ரசிகர்களை பலவிதங்களில் ஆச்சர்யபடுத்துவதோடு மட்டுமல்லாமல், படத்தின் கதைப் போக்குடன் சேர்ந்து ரசிகர்களும் விடை தேடும்விதமாக அமைந்து இருக்கும்.

எனது முதல் தெலுங்கு மொழி படமாக வெளியான ‘118’ படத்திற்கு, ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவு, எனக்கு மேலும் பொறுப்புணர்வை கொடுத்துள்ளது. ‘118’ திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது, மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்ட பகுதிகளிலும், நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றிதான் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் எடுப்பதற்கான உத்வேகத்தை எனக்குத் தந்துள்ளது. 

எனது முதல் படமான இனிது இனிது’ திரைப்படத்தில், முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஆதித். அப்படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். அதன் பிறகு  தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து சிறப்பான நடிகர் எனும் பெயர் பெற்றார். தமிழில் நடிகர் தனுஷுடன் தங்க மகன்’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். பல வெற்றி பெற்ற தெலுங்கு படங்களில் நடித்தும் புகழ் பெற்றார்.

டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் அவர்களின் மகளான, ஷிவானி மிகவும் திறமையான நடிகை. படத்தின் பல இடங்களில், அசாத்தியமான காட்சிகளையும், ஒரே டேக்கில் அவர் நடித்து அசத்தியது படக் குழுவையே ஆச்சர்யப்படுத்தியது. இது சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலையும், அர்பணிப்பையும் வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருந்தது.

தியேட்டரில் இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்குமென நம்புகிறேன். டிரெய்லர், இசை மற்றும் உலகமெங்கும் படம் வெளியிடும் தேதியை விரைவில் அறிவிப்போம்…” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ரஜினிக்காக இன்னும் காத்திருக்கும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி..!

‘கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கதை சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் வெளியானபோது...

‘விசித்திரன்’ டைட்டில் விவகாரம் – பாலா-ஆர்.கே.சுரேஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரொடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015-ம் ஆண்டு ‘விசித்திரன்’ என்ற தலைப்பை...

ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படம் துவங்கியது..!

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ என்ற...

அனுஷ்காவிடமிருந்து சமந்தா தட்டிப் பறிக்கும் படங்கள்..!

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு வயது 40 என்றாலும் அவர் மீதான கிரேஸ் இன்னமும் தென்னிந்திய மொழி ரசிகர்களிடத்தில் குறையவே இல்லை. கடைசியாக ‘நிசப்தம்’ படத்தில் அனுஷ்கா நடித்திருந்தாலும் அதிகமான படங்களை...