பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமானது ஏன்!

பொனனியின் செல்வன் நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் படம் பற்றிய செய்திகள் ஓய்வதாக இல்லை.

படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறிய செய்தி, சுவாரஸ்யமானது.

“பொ.செ. படப்பிடிப்பு உத்தரபிரதேசத்தின் ஜான்சிக்கு அருகில்உள்ள ஓர்ச்சா என்ற நகரத்தில்மூன்று நாட்கள் நடைபெற்து. அங்கு உள்ள குவாலியர் கோட்டைதான் எங்கள் களம்.  அப்போது நடக்கும் காட்சிக்கு 18 குதிரைகளை சென்னையில் இருந்து அழைத்து வருவதாக ஏற்பாடு.

நடிக்க வேண்டிய  கார்த்தி, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு த்ரிஷா எல்லோரும் வந்துவிட்டார்கள்.

இவர்களுக்கான காட்சிகளில் போர் வீரர்கள் குதிரைகளில் அமர்ந்து செல்வது போல் படமாக்கப்படுகிறது.

ஆனால் குதரைகள் வந்தபாடில்லை. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் டென்சன் ஆகிவிட்டனர்.

சென்னையில் இருந்து 18 குதிரைகள் வந்த 5 மினி லாரிகளை குவாலியர் காவல்துறையினர் மடக்கி, தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பது தெரியவந்தது.

பிறகு காவல்துறையினர் குதிரை வண்டிகளை விடுவித்தனர். ‘‘குதிரைகள் கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்டன” என்று காவல்துறை விளக்கம் சொன்னது.

பெரிய நடிகர்கள் சிலர் தாமதமாக வருவதால், படப்பிடிப்பு தடைபடும் என சொல்லப்படுவது உண்டு. ஆனால் குதிரைகளால் படப்பிடிப்பு தாமதமானது இப்போதுதான்.