Saturday, September 21, 2024

“கணவரைப் பிரிந்து வாழ்வது ஏன்..?” – பிக்பாஸில் விளக்கம் சொல்லிய ரக்சிதா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது ‘பிக்பாஸ்-6’-வது சீஸனில் கலந்து கொண்டு கலக்கி வரும் சீரியல் நடிகையான ரக்சிதா தற்போது தன் கணவரை தான் ஏன் பிரிந்து வாழ்கிறேன் என்பதற்கான விளக்கத்தை பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.

இன்று ‘பிக்பாஸ்’ வீட்டில் ரஷிதா தனது சக போட்டியாளர்களான கதிர், குயின்ஸி ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது தன் மனக் குமுறலைக் கொட்டியிருக்கிறார்.

ரக்சிதா இது குறித்துப் லபேசும்போது, “நான் எதற்கடுத்தாலும் குடும்பம், குடும்பம் என்று பார்த்துதான் அனைத்தையும் இழந்தேன். என் மொத்த வாழ்க்கையும் விமர்சனங்களுக்குப் பயந்து, பயந்தே போய்விட்டது. என் வாழ்க்கை முழுவதும் குடும்பம், குடும்பம் என்று நினைத்தே ஓடிவிட்டது.  

நான் ஒரு பார்ட்டிக்குகூட போனது இல்லை. நிறைய பேர் என்னிடம், “பெங்களூரில் பிறந்துவிட்டு பார்ட்டிக்குகூட போக மாட்றியே..?” என்று கேட்பார்கள். ஒரு ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றால்கூட நான் குடும்பத்துடன் மட்டும்தான் போவேன். குடும்பம்தான் என்னுடைய பலம் மற்றும் பலவீனம்.

ஒவ்வொரு வீட்லேயும் அம்மா, அப்பா எல்லோரும் தன்னுடைய குழந்தைக்கு என்று அனைத்தையும் கொடுத்து விடுகிறார்கள். திருமணத்திற்கு பின்னர் அவர்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் பிள்ளைகளிடம் திருப்பிக் கேட்கலாமா, வேண்டாமா என்று யோசித்து விட்டுவிடுவார்கள்.

அம்மா, அப்பாவை வேறு யார் பார்த்துக் கொள்வார்கள்.? நாமதானே பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், ஒரு சில கட்டுப்பாடுகளால் நமக்கும் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது. அது போன்ற சூழ்நிலைகள் எல்லாம் பிள்ளைகளுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

நான் சம்பாதிக்கிறேன். நான் ஏன் என்னுடைய தாய் தந்தைக்கு கொடுக்கக் கூடாது. நீ யார் அதை கேட்பதற்கு என்ற கேள்வி கேட்கும் சூழல் கண்டிப்பாக ஒரு சிலரின் வாழ்க்கையில் தோன்றும். அது போன்ற நிலைமை எல்லாம் யாருக்கும் வரக்கூடாது. நான் அந்த நிலைமையை மிகவும் மோசமாக அனுபவித்து இருக்கிறேன்…” என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News